குரலறியா பேச்சுகள்

 ஏன் கையில் வாங்கியவுடன் தந்துவிட்டாய்

          
                      என்  கை  எதையும் பிடித்து       
                   கொண்டிருக்கவிரும்பவில்லை
 
             ஏன் உன்  கைக்கு பெருந்தனிமை தந்து         
                                   தண்டிக்கிறாய்

            எனக்குதான் இன்னொரு கை இருக்கிறதே

      உனது  கையை இன்னொரு கை  ஆயிம்முறை
              பிடித்தாலும் வேறொரு கை பிடிக்கும்
                     உணர்வை தந்துவிட முடியுமா?
       
            .....????????...........!!!!!!!!!!...........????????........


       தீபத்தை கிழக்கு பார்த்துத்தான் வைக்கணும்

      தீபத்தின் திரிக்குத்தானே திசை வேண்டும்,

    தீபத்தின் சுடருக்கு திசைபேதம் கிடையாதே!?
 
                              உண்மைதான்!!



நீ தேவகுலமா? அசுரகுலமா?
அதிலென்ன சந்தேகம் அசுரகுலம்தான்.
மண்ணில் நிலைகொண்ட சில தெய்வங்கள் அருளால் சில தேவகுணங்கள் பெற்றேன்.
ஆச்சரியம்தான்!!


சொல்லி  தீரா மொளனம் சொல்லும் விழிகள் கொண்டவளே, உன் விழிகள் பேசும் மொழியை
கேட்கும்போது மட்டும் செவிகளாகி போகின்றன
என் விழிகள்...
           உன் விழிகளால் விழியற்றவனானேன்
இப்போது...


காதல்
             தோல்வியாகும்போதும்
             ஏமாற்றமாகும்போதும்
              வன்முறையில் முடியும்போதும்
 காதலே  சிலுவையில் அறையப்படுகிறது.
இருந்தும், இவ்வுலகில் ஒவ்வொரு கணமும்
ஒரு காதல் உயிர்த்தெழுகிறது.
என்றும் வாழ்க
                 ஆண்பெண் அன்பின் மகத்துவம்.

கருத்துகள்