இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொன்னியின் செல்வன் படத்தின் வாளும் மாமல்லபுரமும்

படம்
 பொன்னியின் செல்வன் படத்தின் வாளும் மாமல்லபுரமும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் முன்னோட்டம் நேற்று வெளியானது முதல் பாகம் வெளியான போதும் நம் மனதில் நின்றது அதில் குத்திட்டு காட்டப்பட்ட வாள். அந்த வாள் இந்திய மன்னர்கள் பயன்படுத்தும் வளைந்த வாள் போன்று இல்லாமல் ஆங்கில சரித்திர படங்களில் காட்டப்படும் வாள் போன்று  இருக்கும். ஆனால் அந்த வாளுக்கும் தமிழ்நாட்டிற்கும் நீண்ட பெரும் தொடர்பு உள்ளது. அந்த வாளின் பெயர் பாம்பே கிளாடியஸ். பாம்பே கிளாடியஸ்  இது இருபுறமும் கூர்முனை கொண்ட நேராகவும் சிறிய கைப்பிடியும் கொண்ட வாள். இதனை போர்க்களத்தில் வெட்டி வீசக்கூடிய வகையில் பயன்படுத்தப்படுகிறது. குதிரையில் அமர்த்து வீசுவதற்கு ஏதுவாக இதன் நீளம் அதிகரிக்கப்பட்டு காணப்படும். இந்த வாள் முதலில் ரோம சாம்ராஜ்யத்தின் பாம்பே நகரில் வடிவமைக்கப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால் இதற்கு பாம்பே கிளாடியஸ் என்று பெயர் வந்தது. சரி இதற்கும் மாமல்லபுரத்திற்கும் என்ன தொடர்பு?              நான் இதை எதேச்சையாகவே கண்டேன். மாமல்லபுரத...

சொல்லா காதல்

 சொல்லா காதல் சொல்லா காதல் என்றுமே சொர்க்கத்தில் சேர்வதில்லை ஆம், அவை மண்ணுலகை ஆசீர்வதிக்க மண்ணில் தங்கிவிட்டவை சொல்லப்பட்ட காதல் பேசி பழகி சிரித்து மகிழ்ந்து பரஸ்பர பலவீனங்கள் தெரிந்து கல்யாணம், குழந்தை, வீடு, வேலை என்றாகி ஒரு கட்டத்தில் எங்கோ ஓரிடத்தில் கரைந்து விட வாய்ப்புண்டு சொல்லா காதல் அன்று மலர்ந்த மலர்களைப் போன்றது அதன் நினைவுகள் தோன்றும் போதெல்லாம் அதன் மணம் மனம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் சொல்லா காதல் என்றுமே சொல்லித் தீராகாதல்

நகர்வலம் கிராம இடம்

    நகரம்  மனித கற்சிதறல்களான கட்டிட காடு நகரம் அறிமுகமில்லாதவர்கள் ஆர்ப்பரிக்கும் கடல் நகரம் ஏழைபணக்கார சாலைகளின்அருங்காட்சியகம் நகரம்  தொழில்நுட்பத்தின் தூண்டுகோல் நகரம் பணச்சாட்டையால் சுழலும் பம்பரம் நகரம்  குற்றங்களின் சோதனை சாலை நகரம்  வாய்ப்புகளுக்கான  பல வழிப்பாதை நகரம் நவநாகரீகத்திற்கான ஒருவழிப்பாதை நகரம்  அவசர வாழ்வின் உந்து பொறி நகரம்  அரசியலின் வளர்ஊடகம் நகரம்  எழுதப்பட்ட சட்டங்களுக்கான செயல்கூடம் நகரம்  கட்டிட கூட்டு கிராமங்களின் தொகுப்பு நகரம் தனி பங்களாக்களின் தீவு கூட்டம் நகரம் இயற்கை பூங்காவினுள் அடைக்கபடும் சிறை நகரம் வரிவிளம்பரத்திற்கான நில செய்தித்தாள் நகரம் வசதிகளின் பேரச்சந்தை நகரம் பெரும்புள்ளிகளால் வரையப்படும் கோலம் நகரம் தனிமனித மனநோய்களின் பிறப்பிடம் நகரம் தனிமனித சுதந்திரத்தின் நிகழ்வெல்லை நகரம் குடும்பத்தினர் உறவினராவர் நகரம் உறவினர் விருந்தினராவர் நகரம் வாழ்கை அறிவுப்பூர்வமானது கிராமம்  வெள்ளந்திதனத்தின் கடைசி புகலிடம் கிராமம்  புறணிகள் வழக்காடு மன்றம் கிராமம் கட்புலனாகத ...

செயல் வழிபாடு

     வெற்றிபெற விடாமுயற்சி தேவையில்லை விரும்பிய முயற்சியே போதுமானது என்பேன் ஏனென்றால் விரும்பிய ஒன்றை விட்டுவிடும் குணம் யார்க்கும் அரிதே இவ்வாழ்வுதனில். அகத்தால் புறம்அணுவளவு பாதித்தால்அதிசயம் ஆனால் புறம் அகத்தினை தொடரலையாய் அலைக்கழிக்கும்,புறத்தால் அகம் பாதிக்காத அகமுடையோர் செயல்களால்  உலகின் நன்மைதீமைகள் படித்தறியப்படுகின்றன. ஒன்றே சிந்தனையில் கொள்; ஒன்றே வாழ்வின் இலட்சியமாக கொள்; அந்த ஒன்றிற்காக வாழ்; நினைவில் கொள்க ; இச்செயல் பிறரால் உன்னை அர்த்தபடுத்திகொள்வதற்கல்ல; உன்னை பிறருக்கு  அர்த்தபடுத்திகொள்வதற்கு.

சுய வழிபாடு

  தன்னை நேசித்தல்                    வாழ்கை தன்னை வெறுத்தல்                  தற்கொலை தன்னை மறத்தல்                        போதை தன்னை உருவாக்குதல்          சுயநிர்ணயம் தன்னை பார்த்தல்                      சுயபரிசோதனை தன்னை கேட்டல்                         சுயபரிசீலனை தன்னை நுகர்தல்                         ...

குரலறியா பேச்சுகள்

  ஏன் கையில் வாங்கியவுடன் தந்துவிட்டாய்                                  என்  கை  எதையும் பிடித்து                           கொண்டிருக்கவிரும்பவில்லை                ஏன் உன்  கைக்கு பெருந்தனிமை தந்து                                             தண்டிக்கிறாய்             எனக்குதான் இன்னொரு கை இருக்கிறதே       உனது  கையை இன்னொரு க...

தாய்

                தாய்      கருவாக விதைத்தாய்       உருவாக பெற்றெடுத்தாய்     உதிரத்தை அளித்தாய்     உடலாக வளர்த்தாய்     உணர்வுகளில்  செறிந்தாய்     உள்ளமாய் மலர்ந்தாய்     ஊக்கமாய் வளர்ந்தாய்     நினைவுகளில் நிறைந்தாய்     தவறுகள் பொறுத்தாய்     குற்றங் கடிந்தாய்     கவலைகள் கலைந்தாய்     காயங்களுக்கு மருந்தாய்     அன்பிற்கு விருந்தாய்     எல்லாவுமாய் தெரிந்தாய் சான்றோன் எனப்பிறர் தன்மகனை கூறாவிடினும் என்றும் பெரிதுவக்கும் என்தாய்

மரணிக்க வேண்டுமா மனிதன்

  மரணிக்க வேண்டுமா                      மனிதன் மரணிக்க வேண்டுமா பிறர் அன்பை அறியாமல்                                         மரணிக்க வேண்டுமா தன் அன்பை வெளிப்படுத்ததெரியாமல்                                         மரணிக்க வேண்டுமா தவறுகளை திருத்திகொள்ளாமல்                                         மரணிக்க...

அருவே திருவடிவாய் உடையவள் போற்றி

  எம்முள்         நிலை பெற்றவள் நீ         நிலைபெறுபவள் நீ         நிலை மாற்றுபவள் நீ         நிலையூட்டுபவள் நீ         நிலைதேற்றுபவள் நீ         நிலைநிறுத்துபவள் நீ         நிலைத்து நிற்பவள் நீ         நிலைநாட்டுபவள் நீ         நிலையேற்றவள் நீ         நிலையேற்றுபவள்  நீ         நிலைசாற்றுபவள் நீ         நிலைபுகுந்தவள் நீ         நிலைவெளிப்பட்டவள் நீ         நிலைகுணமானவள் நீ         நிலைமாறும் மனமானவள் நீ       ...