இடுகைகள்

திருவண்ணாமலை கிரிவலம் -1

 மே 5        இன்று சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். நான் சுற்றுலா செல்பவன் அல்ல, பயணிப்பவன். சுற்றுலா என்பது திட்டமிட்டு செல்வது, பயணம் என்பது ஒரு பகுதி மட்டுமே திட்டமிடல், பெரும் பகுதி எதிர்பாராத அனுபவங்களை சந்திக்கும் விருப்பமே மேலோங்கி இருக்கும்.        அதனாலேயே பெரும்பாலும் தனியாகவே பயணம் செய்வதுண்டு இரவு கோனேரி குப்பத்தில் ஒன்பது மணிக்கு பேருந்து பிடித்து கிளம்பி திருவண்ணாமலை செல்லும் விலக்கில் இறங்கினேன். இரவு உணவு சாப்பிடலாம் என எண்ணிய போது பேருந்து வந்து விட்டது. சிறிது பசியுடனும் தாகத்துடனும் வண்டி ஏறினேன் ஆனால் சிறிது நேரத்தில் தூங்கி தூங்கிவிட்டேன். திடீரென கண்டக்டர் இறங்குங்கள் என்று சத்தம் விட்டார் மணியை பார்த்தால் 10:50. நகரின் புறவழிச்  சாலையில் இறங்கி விட்டார்கள். தூக்கம்  சிறிதாக களைந்து அங்கேயே நின்றேன்.       பக்கத்திலேயே ஆவின் பாலகம் இருந்தது திருவண்ணாமலையின் நிறைய ஆவின் பாலகர்கள் உண்டு. அங்கு பால் அருந்துவது எனக்கு பிடித்த அனுபவம், அதுவும்  நடுஇரவில் ...

முத்தம்மாள் புராணம்

  முத்தம்மாள் புராணம் எத்தனையோ அழகிகள் வாழ்வைவிட சில கிழவிகள் வாழ்வு அழகியல் தன்மை நிறைந்திருக்கும். அதற்கான நல்ல உதாரணம் எனது ஊர் முத்தம்மாள். பிறக்க ஒருஊர், பிழைக்க ஒருஊர் என்ற சொலவடை மரபைமீறி வாழ்வதற்கென ஒரு ஊர் கண்டு வந்து சேர்ந்தாள் எங்கள் ஊருக்கு. செல்வக் குடும்பத்தில் பிறந்து சீரும்சிறப்பாய் திருமணம் கொண்டு நேர்கோட்டில் சென்ற அவள் வாழ்வு மலையேற்றம் கண்டது பல திருப்பங்களுடன் மணவாழ்வில் பெற்ற பெண்பிள்ளை பசிதீர்ந்து பக்கத்தில் உறங்கிட மறுபுறம் தலைதிரும்பி தாய் உறங்கிய அயர்ச்சியில் தவறுதலாக சாய்ந்ததால் மூச்சடைத்து தவறியது அந்த சிறுதளிர் என்ற பாட்டிக்கதை ஊரிலுண்டு . இதுமெய்யாகுமானால் வாழ்வின் வெறுமையிருள் சூழ்ந்த குற்றவுணர்வாலான முட்புதர்காட்டினில் கண்கட்டி விடப்பட்டிருப்பாள். கிராமங்கள் எவ்வளவுக்களவு அக்கறைகள் நிறைந்ததோ அவ்வளவு பாசாங்கு நிறைந்தது,ஆறுதல்களால் அமைதியும் தரும்; புறணிகளால் அருவருப்பையும் தரும் . இளமையில் மோட்டார்வண்டியில் நான்போக, எண்பதிலும் எந்த ஊருக்கும் எந்தநேரத்திலும் நடந்துசென்ற உன்னை பார்க்கும்போதெல்லாம் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்ட அட...

Tamil what's app status

படம்