இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனதட்டச்சு இயந்திரம்

 கடந்த கடக்கின்ற  நிமிடங்களை கொண்ட   பஸ் பயணங்களின் ஜன்னலோரம் சாய்ந்து கொள்ளும் தனிமை  இருக்கைகள் புத்தனின் போதிமர சிந்தனை நிழலாக நகர்கின்றன  சில நேரங்களில்.  பயணங்களில் மனதில் எழும் எண்ணங்கள்  ஆழ்கடலில்  ஒளிந்திருந்த திமிங்கலங்கள்  மேற்பரப்புக்கு  வந்து விடும் மூச்சு நீரூற்று போன்று ஞான சாரலை தென்றலாக முகத்தில் வாரி தெளிக்கின்றன  நித்திய ரசிப்பை கொண்ட முழுநிலவே   உன்னை எப்போதும்  ரசிக்க நித்திய காரணம் உண்டென்றால் அது முழுமைமட்டுமா? உன்னை  முழுமையாக்கிய சில கருமையும்தானே என்பதை அறிந்தேன் இன்று.  பயணத்தின் தூரமும் நேரமும் தெரியாதவரை பயணங்களில் அதிக  சுமைகளை சுமந்து சென்றாலும் சுகமாகவே தெரிகிறது, மனதின் சுமைக்களை இறக்கிவைத்து இளைப்பாறும் நினைவின் தோள்களுக்கு.  பொய்யோர்க்கு பயந்து தம்மை மறைத்து, புதியோரை காணுமிடத்தில் பொய்யுரைத்து,  மெய்யோர் காணும்வழியடைத்தபின், மெய்யோர் எதிர்கண்டால் பொய்யரோ என ஐயங்கொண்டு அஞ்சுவார் நம்மை கண்டு.  கடலை காணும்போதெல்லாம் ஏற்படும் இனம் புரியாத மகிழ்ச்சியின்...

ஹைக்கூ வரிசை -3

  சாலைக்கு இருபக்கங்கள் இருந்தும்கூட பயணம் ஒரு கணத்தில் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மை பார்க்க அனுமதிக்கிறது எதிர்பாராமல் கற்பழித்துவிட்டேன் ஒரு பெண்ணை, கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை ஆராயும்போது கற்பனையில்... அகலச்சாலைகள் எளியமக்களுக்கு  தொலைவில் உள்ளபெருநகரங்களை பக்கமாக்குகின்றன. பக்கத்து சிற்றூர்களை தூரமாக்குகின்றன இடைநில்லா பேருந்துகளால் அடுத்த அலை வந்து முற்றிலுமாக அழித்துவிட்டலும் ஈரம் பிழிந்த காலடி சுவடாக அழுத்தத்தையும் அழகியலையும் இனிமையையும் வரையக்கூடியது வாழ்க்கை... போதைப்பொருட்களுக்கு எடுத்துக்காட்டு :- கனவுகள் கற்பனைகள் இசை முதலான பிற. புத்தனின் கூற்று : ஆசையே துன்பத்திற்கு காரணம். பின்நவீனத்துவ புத்தனின் கூற்று : ஆசையே மனிதன் வாழ்வில் அடைந்த அனைத்து வலிமைகளுக்கு காரணம். பொருளாதார தகவல் சில சேமிப்புகளின் வட்டிவீதம் இறங்குவரிசை அடிப்படையில், கோபம் <வெறுப்பு <கவலை< .......... <வங்கிகளின் நிரந்தர வைப்புத்தொகை. உன் விழி பேசும் மொழியை கேட்டு என் விழிகள் செவிகளானதால் விழியற்றவனானேன். நீர்பனி உருகிவிடும் அன்பின் மீது படிந்த  உயிர்பனி உருகுவ...

ஹைக்கூ வரிசை -2

  நினைவில் நின்ற கதைகள் எல்லாம் பேசிப்பேசி  காய்ந்த போனபின் நினைவில் நிற்காத கதைகளை  யாசித்து நின்றேன் என்  மனவானை நோக்கி தனிமை என்பது பிரபஞ்சத்துடனான உரையாடல் எனும்போது,அது எப்படி தனிமையாக முடியும்? குழந்தைகளை சுவாரஸ்யமான கதைபுத்தகமாக படிப்பதைவிட தேர்வுக்குரிய பாடப்புத்தகமாக படிக்குமாறு பெற்றோர்களை கட்டாயமாக்குகிறது கட்டுப்பாடுகளை மீறும் சமூகம் உலகில் காணும் மனிதசண்டைகளின்மூலம்  இரண்டே -ஒரு பெயரைப் பலபொருளாகக் கொள்வது ஒரு பொருளுக்கு பலபெயர்கள் பெறுவது . இலையுதிர்கால இளவேனிற் தென்றலால் வீழும் ஒவ்வொரு இலையும் வாழ்வின் வீழ்ச்சியை நர்த்தனமாடி வீழ்ந்து கவிதையாக்குகின்றன இன்றுதான் எதேச்சையாக கவனித்தேன் எவ்வளவு நுணுக்கமான அழகான இறக்குகள்  சே... விட்டில்பூச்சிக்கு இருக்கிறதே... சுவைக்கும்போது மட்டும்தான் ருசிக்கமுடிகிறது. சுவையினை தரப்படுத்த முயன்றால் ருசி பிறரால் ருசிக்கப்படுகிறது.

ஹைக்கூ வரிசை -1

  துப்பாக்கியின்  தொலைநோக்கியில்  புறாக்கள் விளையாடும் காட்சிகளை கண்டன  இளம்போராளியின் கண்கள். காற்றின் சுதந்திரத்தால் கவரப்பட்ட இலைகள் மரங்களிடம் சண்டையிட்டு ஆடி உதிர்கின்றன சருகுகளாக. விருட்சம் விடுவிக்கும் வரை காத்திருந்த விதைகள் தம்மை இன்னொரு விருட்சமாக்கி கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றன நேர்கோடு வரையும் சுயபுத்தி எல்லாரிடமும் இருந்தும் பொதுவெளியில் இணைகோடு வரைவதே தகுதியாக பார்க்கப்படும். சீசீ இந்த பழம் புளிக்கும் என்ற எண்ணம் தரும் முடிவும்   சிலநேரங்களில் இனிக்கும் பறவைகள் அழகாய் இருக்கின்றன. பறவைகள் அழகாய் சப்தமிடுகின்றன. பறவைகள் அழகாய் பறக்கின்றன. மேற்கண்டவற்றில் சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு. என் பிம்பம் எவ்வளவு தத்ரூபமாக இருந்தாலும் அதனால் என் குரலுக்கு  வாயசைக்கதான்  முடியும்.

தத்துவ கிழிஞ்சல் பொறுக்கல்

தெரிந்தது தெரிந்து கொள்ளவதை தடுக்கிறது  கேள்விகள் மட்டுதான் உண்மையோ ? அனைத்து மிகச்சிறந்த பதில்களும் உண்மைக்கு நிகரானவையோ ? கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்கள் உண்மையோ? பதில்களிலிருந்து எழும் கேள்விகள் உண்மையோ ? தேடும் பொருள் நம்மை தேடுவதில்லை, தேடிவரும் பொருள் நம்மால் தேடப்படுவதில்லை. ஆகையால், தேடுவதற்கென்றே தனிமனம்  வைத்துக்கொள். ஏனென்றால், தேடலும் ஒன்றல்ல தேடும் மனமும் ஒன்றல்ல. கருத்தான மனிதம் கருவாகி உருவாகி உணர்வாகி வாழ்வின் சிறுதுளி உதாரணமாகி இறுதியில் மரணத்தால் மீண்டும் கருத்திற்கு செல்கிறது.

திருமண தகுதிகள்

  "திருமண அழைப்பிதழில் உன் பெயருக்கு  பின்னால் போடவேண்டிய பட்டப்படிப்புகளை சரியாக எழுதிக்கொடு",  என அப்பா கேட்டதாக  முகத்தில்  அவசரத்தை காட்டிக்கொண்டு  வந்தாய் எனதருகே. "ஒரேயொரு பட்டபடிப்புதான் போடவேண்டும் அதுவும்கூட முடிவடையாததால்மேற்கோடிட வேண்டுமே" என்றேன் ஆசுவாசமாக அது என்ன படிப்பு என உன் கயல்விழிகளின் புருவங்கள் கேள்விக்குறிகளாக வடிவமெடுத்தன. அதனை எனது நகைப்பால் ஊடுருவி " மேற்கோடிட்ட இளநிலை அன்பியல் மட்டும் போட்டால் போதும்" என்றேன் செல்லகோபம் தூவிய புன்னகையில், "அப்படியானால் நமது பெற்றோர் பெயருக்கு பின்னால் மேற்கோடிட்ட முதுநிலை  அன்பியல் பட்டம் போட்டுவிடசொல்லிவிடுகிறேன் , எதற்கு வீண்வேலை" என்றாய் ,பலநாள் பழகிய முகத்தில் புதுபெண்ணின் வெட்ககீற்றுடன்...

குறும்பாக சில குறும்பா

  காதலிக்காத  பயணநேரமில்லை                        உன்னை  நில் கவனி  காதலைச்  சொல்லாமல் சென்றுவிடாதே.  உன் இதய நிபுணராவதற்கு நீட் கட்டாயமா?  உன் வாஞ்சனை,சிரிப்பு, வெட்கம்,முத்தம், கோபம் இவற்றிற்கு வரிவிகிதங்கள்  நிர்ணயிப்பாயா?  மிக அவசரம்  என ஒட்டப்பட வேண்டும் நீ வரும் பேருந்துகளில்,  காத்திருக்க முடியவில்லை. குழப்பங்களில் கடவுள் இருக்கிறாரா  இல்லையா என்பதை போன்றது நீ என்னை பார்ப்பது  குழந்தைகள் ஒளிந்துகொள்ளும்  இடத்தை போன்றது நீ பார்க்காதபோது நான் உன்னை பார்ப்பது.  நெருக்கத்தில்  நீ நெருக்கமாக  நான் நெருக்கடிக்கு  உள்ளாகும் நம் நாணம்  நீ பேசும்போது உன் கண்களை  பார்ப்பதில்லை, இரண்டும்  பேசினால் எதை நான் கவனிப்பது?  நெருங்கி வா  முத்தமிடு  என்னிடமும்  சொல்லாதே துப்பாக்கிச்சூட்டில் முடிந்துவிடும் உள்நிலவரம். மலரினும் மெல்லிது காமம் அம்மலர் கொண்ட இதழினும்  மெல்லுணர்வு கொண்டது உன் வதனம்  நீ  மு...