மனதட்டச்சு இயந்திரம்
கடந்த கடக்கின்ற நிமிடங்களை கொண்ட
பஸ் பயணங்களின் ஜன்னலோரம் சாய்ந்து கொள்ளும் தனிமை இருக்கைகள் புத்தனின் போதிமர சிந்தனை நிழலாக நகர்கின்றன
சில நேரங்களில்.
பயணங்களில் மனதில் எழும் எண்ணங்கள்
ஆழ்கடலில் ஒளிந்திருந்த திமிங்கலங்கள்
மேற்பரப்புக்கு வந்து விடும் மூச்சு நீரூற்று
போன்று ஞான சாரலை தென்றலாக முகத்தில்
வாரி தெளிக்கின்றன
நித்திய ரசிப்பை கொண்ட முழுநிலவே
உன்னை எப்போதும் ரசிக்க நித்திய காரணம் உண்டென்றால் அது முழுமைமட்டுமா? உன்னை
முழுமையாக்கிய சில கருமையும்தானே என்பதை
அறிந்தேன் இன்று.
பயணத்தின் தூரமும் நேரமும் தெரியாதவரை
பயணங்களில் அதிக சுமைகளை சுமந்து
சென்றாலும் சுகமாகவே தெரிகிறது, மனதின் சுமைக்களை இறக்கிவைத்து இளைப்பாறும்
நினைவின் தோள்களுக்கு.
பொய்யோர்க்கு பயந்து தம்மை மறைத்து,
புதியோரை காணுமிடத்தில் பொய்யுரைத்து,
மெய்யோர் காணும்வழியடைத்தபின், மெய்யோர் எதிர்கண்டால் பொய்யரோ என ஐயங்கொண்டு
அஞ்சுவார் நம்மை கண்டு.
கடலை காணும்போதெல்லாம் ஏற்படும் இனம் புரியாத மகிழ்ச்சியின் இனம்கண்டேன் இன்று. வாழ்வின் விதிகளில் அடைபட்ட புலன்களில் கண்பெற்ற கண்ணுக்கெட்டியதூர சுதந்திரமோ,
உன்மறுபெயர்தான் மகிழ்ச்சியோ?
நகரத்து வீதிகளில் நடந்துசெல்லும் வேளையில்
அன்பாய் பார்க்கும் ஆனந்த முகங்கள் பல,
அழகாய் பார்க்கும் அற்புதமுகங்கள்பல, பரிவாய்
பார்க்கும் பண்பட்டமுகங்கள் பல கண்டேன்,
விளம்பர பலகைகளில் மட்டும்.
நான்தான்🙂
நான் மட்டும்தான்😊
நான்மட்டும்தானா நீ இல்லையா😔
நான் கண்ட நீ😄🙂
நானும் நீயும்☺☺
நான் கண்டதால் நீ😏😕
நான் காணாதது நீயல்ல😡😳
ஆனால் நீ காணாத நானுண்டு🤨😐
நான் இன்றி நீ இல்லை😤😰
நீ என்பதும் நான்தான்🙂🙃
மீண்டும் நான்தான்🙂.......
சிந்தனையை தூண்டிய சிந்தையால்
சிந்தித்ததெல்லாம் சிந்தித்ததால்
சிந்திக்காததை சிந்திக்கவைக்கின்ற
சிந்தையே போற்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக