ஹைக்கூ வரிசை -3


 சாலைக்கு இருபக்கங்கள் இருந்தும்கூட

பயணம் ஒரு கணத்தில் ஒரு பக்கத்தை மட்டுமே

நம்மை பார்க்க அனுமதிக்கிறது

எதிர்பாராமல் கற்பழித்துவிட்டேன் ஒரு பெண்ணை,
கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை ஆராயும்போது
கற்பனையில்...

அகலச்சாலைகள் எளியமக்களுக்கு  தொலைவில் உள்ளபெருநகரங்களை பக்கமாக்குகின்றன.
பக்கத்து சிற்றூர்களை தூரமாக்குகின்றன இடைநில்லா பேருந்துகளால்


அடுத்த அலை வந்து முற்றிலுமாக அழித்துவிட்டலும்
ஈரம் பிழிந்த காலடி சுவடாக அழுத்தத்தையும் அழகியலையும் இனிமையையும் வரையக்கூடியது
வாழ்க்கை...

போதைப்பொருட்களுக்கு எடுத்துக்காட்டு :-
கனவுகள்
கற்பனைகள்
இசை முதலான பிற.


புத்தனின் கூற்று : ஆசையே துன்பத்திற்கு காரணம்.
பின்நவீனத்துவ புத்தனின் கூற்று : ஆசையே மனிதன் வாழ்வில் அடைந்த அனைத்து வலிமைகளுக்கு காரணம்.

பொருளாதார தகவல்
சில சேமிப்புகளின் வட்டிவீதம் இறங்குவரிசை அடிப்படையில்,
கோபம் <வெறுப்பு <கவலை< .......... <வங்கிகளின் நிரந்தர வைப்புத்தொகை.


உன் விழி பேசும் மொழியை கேட்டு என் விழிகள் செவிகளானதால் விழியற்றவனானேன்.

நீர்பனி உருகிவிடும் அன்பின் மீது படிந்த
 உயிர்பனி உருகுவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சொல்லா காதல்