சொல்லா காதல்
சொல்லா காதல்
சொல்லா காதல் என்றுமே சொர்க்கத்தில் சேர்வதில்லை
ஆம், அவை மண்ணுலகை ஆசீர்வதிக்க மண்ணில் தங்கிவிட்டவை
சொல்லப்பட்ட காதல் பேசி பழகி சிரித்து மகிழ்ந்து பரஸ்பர பலவீனங்கள் தெரிந்து கல்யாணம், குழந்தை, வீடு, வேலை என்றாகி ஒரு கட்டத்தில் எங்கோ ஓரிடத்தில் கரைந்து விட வாய்ப்புண்டு
சொல்லா காதல் அன்று மலர்ந்த மலர்களைப் போன்றது
அதன் நினைவுகள் தோன்றும் போதெல்லாம் அதன் மணம் மனம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும்
சொல்லா காதல் என்றுமே சொல்லித் தீராகாதல்
கருத்துகள்
கருத்துரையிடுக