திருவண்ணாமலை கிரிவலம் -1
மே 5 இன்று சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். நான் சுற்றுலா செல்பவன் அல்ல, பயணிப்பவன். சுற்றுலா என்பது திட்டமிட்டு செல்வது, பயணம் என்பது ஒரு பகுதி மட்டுமே திட்டமிடல், பெரும் பகுதி எதிர்பாராத அனுபவங்களை சந்திக்கும் விருப்பமே மேலோங்கி இருக்கும். அதனாலேயே பெரும்பாலும் தனியாகவே பயணம் செய்வதுண்டு இரவு கோனேரி குப்பத்தில் ஒன்பது மணிக்கு பேருந்து பிடித்து கிளம்பி திருவண்ணாமலை செல்லும் விலக்கில் இறங்கினேன். இரவு உணவு சாப்பிடலாம் என எண்ணிய போது பேருந்து வந்து விட்டது. சிறிது பசியுடனும் தாகத்துடனும் வண்டி ஏறினேன் ஆனால் சிறிது நேரத்தில் தூங்கி தூங்கிவிட்டேன். திடீரென கண்டக்டர் இறங்குங்கள் என்று சத்தம் விட்டார் மணியை பார்த்தால் 10:50. நகரின் புறவழிச் சாலையில் இறங்கி விட்டார்கள். தூக்கம் சிறிதாக களைந்து அங்கேயே நின்றேன். பக்கத்திலேயே ஆவின் பாலகம் இருந்தது திருவண்ணாமலையின் நிறைய ஆவின் பாலகர்கள் உண்டு. அங்கு பால் அருந்துவது எனக்கு பிடித்த அனுபவம், அதுவும் நடுஇரவில் ...