ஹைக்கூ வரிசை -1
துப்பாக்கியின் தொலைநோக்கியில் புறாக்கள் விளையாடும் காட்சிகளை கண்டன இளம்போராளியின் கண்கள்.
காற்றின் சுதந்திரத்தால் கவரப்பட்ட
இலைகள் மரங்களிடம் சண்டையிட்டு ஆடி
உதிர்கின்றன சருகுகளாக.
விருட்சம் விடுவிக்கும் வரை காத்திருந்த
விதைகள் தம்மை இன்னொரு
விருட்சமாக்கி கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றன
நேர்கோடு வரையும் சுயபுத்தி எல்லாரிடமும்
இருந்தும் பொதுவெளியில்
இணைகோடு வரைவதே தகுதியாக பார்க்கப்படும்.
சீசீ இந்த பழம் புளிக்கும் என்ற எண்ணம் தரும்
முடிவும் சிலநேரங்களில் இனிக்கும்
பறவைகள் அழகாய் இருக்கின்றன.
பறவைகள் அழகாய் சப்தமிடுகின்றன.
பறவைகள் அழகாய் பறக்கின்றன.
மேற்கண்டவற்றில் சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.
என் பிம்பம் எவ்வளவு தத்ரூபமாக இருந்தாலும்
அதனால் என் குரலுக்கு வாயசைக்கதான் முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக