தத்துவ கிழிஞ்சல் பொறுக்கல்

தெரிந்தது தெரிந்து கொள்ளவதை தடுக்கிறது 

கேள்விகள் மட்டுதான் உண்மையோ ?
அனைத்து மிகச்சிறந்த பதில்களும்
உண்மைக்கு நிகரானவையோ ?

கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்கள்
உண்மையோ?
பதில்களிலிருந்து எழும் கேள்விகள்
உண்மையோ ?

தேடும் பொருள் நம்மை தேடுவதில்லை,
தேடிவரும் பொருள் நம்மால் தேடப்படுவதில்லை.
ஆகையால்,
தேடுவதற்கென்றே தனிமனம்  வைத்துக்கொள்.
ஏனென்றால்,
தேடலும் ஒன்றல்ல தேடும் மனமும் ஒன்றல்ல.


கருத்தான மனிதம் கருவாகி உருவாகி உணர்வாகி
வாழ்வின் சிறுதுளி உதாரணமாகி இறுதியில்
மரணத்தால் மீண்டும் கருத்திற்கு செல்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹைக்கூ வரிசை -3

சொல்லா காதல்