ஹைக்கூ வரிசை -2
நினைவில் நின்ற கதைகள் எல்லாம் பேசிப்பேசி காய்ந்த போனபின் நினைவில் நிற்காத கதைகளை யாசித்து நின்றேன் என் மனவானை நோக்கி
தனிமை என்பது பிரபஞ்சத்துடனான உரையாடல் எனும்போது,அது எப்படி தனிமையாக முடியும்?
குழந்தைகளை சுவாரஸ்யமான கதைபுத்தகமாக
படிப்பதைவிட தேர்வுக்குரிய பாடப்புத்தகமாக படிக்குமாறு பெற்றோர்களை கட்டாயமாக்குகிறது
கட்டுப்பாடுகளை மீறும் சமூகம்
உலகில் காணும் மனிதசண்டைகளின்மூலம்
இரண்டே -ஒரு பெயரைப் பலபொருளாகக் கொள்வது
ஒரு பொருளுக்கு பலபெயர்கள் பெறுவது
.
இலையுதிர்கால இளவேனிற் தென்றலால் வீழும்
ஒவ்வொரு இலையும் வாழ்வின் வீழ்ச்சியை நர்த்தனமாடி வீழ்ந்து கவிதையாக்குகின்றன
இன்றுதான் எதேச்சையாக கவனித்தேன்
எவ்வளவு நுணுக்கமான அழகான இறக்குகள்
சே... விட்டில்பூச்சிக்கு இருக்கிறதே...
சுவைக்கும்போது மட்டும்தான் ருசிக்கமுடிகிறது.
சுவையினை தரப்படுத்த முயன்றால் ருசி
பிறரால் ருசிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக