குறும்பாக சில குறும்பா
காதலிக்காத பயணநேரமில்லை
உன்னை
நில்
கவனி
காதலைச் சொல்லாமல்
சென்றுவிடாதே.
உன்
இதய
நிபுணராவதற்கு
நீட் கட்டாயமா?
உன் வாஞ்சனை,சிரிப்பு,
வெட்கம்,முத்தம், கோபம்
இவற்றிற்கு வரிவிகிதங்கள்
நிர்ணயிப்பாயா?
மிக அவசரம் என
ஒட்டப்பட வேண்டும்
நீ வரும் பேருந்துகளில்,
காத்திருக்க முடியவில்லை.
குழப்பங்களில் கடவுள்
இருக்கிறாரா இல்லையா
என்பதை போன்றது நீ
என்னை பார்ப்பது
குழந்தைகள் ஒளிந்துகொள்ளும்
இடத்தை போன்றது
நீ பார்க்காதபோது நான்
உன்னை பார்ப்பது.
நெருக்கத்தில் நீ
நெருக்கமாக நான்
நெருக்கடிக்கு உள்ளாகும்
நம் நாணம்
நீ பேசும்போது உன் கண்களை
பார்ப்பதில்லை, இரண்டும்
பேசினால் எதை நான்
கவனிப்பது?
நெருங்கி வா
முத்தமிடு
என்னிடமும் சொல்லாதே
துப்பாக்கிச்சூட்டில் முடிந்துவிடும்
உள்நிலவரம்.
மலரினும் மெல்லிது காமம்
அம்மலர் கொண்ட இதழினும்
மெல்லுணர்வு கொண்டது
உன் வதனம்
நீ முகக்கவசம் அணியும்போது
நான் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது
தனிநபர் இடைவெளியை,
உன் விழிகளின் தாக்குதலில்
இருந்து பாதுகாத்துக்கொள்ள .
நிறவேறறுமை பாராட்டும்
நிறவெறி அதிகரித்துள்ளது,
உன் கார்மேக கூந்தலையும்
அதுபடிந்த மாநிறம் மலர்ந்திடும்
நுதலையும் கண்டு.
இறுதி விண்ணப்பம் பேருந்தில்
நான் இறங்குமிடம் தாண்டி
நீ இறங்கிவிடாதே. இல்லையேல்
நிச்சயம் மாட்டிக் கொள்ளவேன்
டிக்கெட் பரிசோதகரிடம்.😍
_ விக்கிக்குட்டி
கருத்துகள்
கருத்துரையிடுக