இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
ஹைக்கூ வரிசை -3
சாலைக்கு இருபக்கங்கள் இருந்தும்கூட பயணம் ஒரு கணத்தில் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மை பார்க்க அனுமதிக்கிறது எதிர்பாராமல் கற்பழித்துவிட்டேன் ஒரு பெண்ணை, கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை ஆராயும்போது கற்பனையில்... அகலச்சாலைகள் எளியமக்களுக்கு தொலைவில் உள்ளபெருநகரங்களை பக்கமாக்குகின்றன. பக்கத்து சிற்றூர்களை தூரமாக்குகின்றன இடைநில்லா பேருந்துகளால் அடுத்த அலை வந்து முற்றிலுமாக அழித்துவிட்டலும் ஈரம் பிழிந்த காலடி சுவடாக அழுத்தத்தையும் அழகியலையும் இனிமையையும் வரையக்கூடியது வாழ்க்கை... போதைப்பொருட்களுக்கு எடுத்துக்காட்டு :- கனவுகள் கற்பனைகள் இசை முதலான பிற. புத்தனின் கூற்று : ஆசையே துன்பத்திற்கு காரணம். பின்நவீனத்துவ புத்தனின் கூற்று : ஆசையே மனிதன் வாழ்வில் அடைந்த அனைத்து வலிமைகளுக்கு காரணம். பொருளாதார தகவல் சில சேமிப்புகளின் வட்டிவீதம் இறங்குவரிசை அடிப்படையில், கோபம் <வெறுப்பு <கவலை< .......... <வங்கிகளின் நிரந்தர வைப்புத்தொகை. உன் விழி பேசும் மொழியை கேட்டு என் விழிகள் செவிகளானதால் விழியற்றவனானேன். நீர்பனி உருகிவிடும் அன்பின் மீது படிந்த உயிர்பனி உருகுவ...
சொல்லா காதல்
சொல்லா காதல் சொல்லா காதல் என்றுமே சொர்க்கத்தில் சேர்வதில்லை ஆம், அவை மண்ணுலகை ஆசீர்வதிக்க மண்ணில் தங்கிவிட்டவை சொல்லப்பட்ட காதல் பேசி பழகி சிரித்து மகிழ்ந்து பரஸ்பர பலவீனங்கள் தெரிந்து கல்யாணம், குழந்தை, வீடு, வேலை என்றாகி ஒரு கட்டத்தில் எங்கோ ஓரிடத்தில் கரைந்து விட வாய்ப்புண்டு சொல்லா காதல் அன்று மலர்ந்த மலர்களைப் போன்றது அதன் நினைவுகள் தோன்றும் போதெல்லாம் அதன் மணம் மனம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் சொல்லா காதல் என்றுமே சொல்லித் தீராகாதல்
































































கருத்துகள்
கருத்துரையிடுக