மரணிக்க வேண்டுமா மனிதன்
மரணிக்க வேண்டுமா
மனிதன் மரணிக்க வேண்டுமா
பிறர் அன்பை அறியாமல்
மரணிக்க வேண்டுமா
தன் அன்பை வெளிப்படுத்ததெரியாமல்
மரணிக்க வேண்டுமா
தவறுகளை திருத்திகொள்ளாமல்
மரணிக்க வேண்டுமா
உண்மையை உணர முடியாமல்
மரணிக்க வேண்டுமா
பொய்களை நம்பிகொண்டே
மரணிக்க வேண்டுமா
மேன்மையை அடையமுடியாமல்
மரணிக்க வேண்டுமா
கீழ்மையை மாற்றமுடியாமல்
மரணிக்க வேண்டுமா
இன்பங்களின் தன்மையறியாமல்
மரணிக்க வேண்டுமா
துன்பங்களில் ஞானம்பெறாமல்
மரணிக்க வேண்டுமா
குழப்பங்களால் தெளிவடையாமல்
மரணிக்க வேண்டுமா
மனமயக்கபோதைகளில் விடுபடாமல்
மரணிக்க வேண்டுமா
ஆசைகளில் திருப்தியடையாமல்
மரணிக்க வேண்டுமா
வாழ்வை ரசிக்கதெரியாமல்
மரணிக்க வேண்டுமா
மரணத்தை எதிர்கொள்ளமுடியாமல்
மரணிக்க வேண்டுமா
மரணிக்க வேண்டுமா
மனிதன் மரணிக்க வேண்டுமா
கருத்துகள்
கருத்துரையிடுக