சுய வழிபாடு
தன்னை நேசித்தல் வாழ்கை
தன்னை வெறுத்தல் தற்கொலைதன்னை மறத்தல் போதை
தன்னை உருவாக்குதல் சுயநிர்ணயம்
தன்னை பார்த்தல் சுயபரிசோதனை
தன்னை கேட்டல் சுயபரிசீலனை
தன்னை நுகர்தல் ஆணவம்
தன்னை மதித்தல் சுயமரியாதை
தன்னை மிதித்தல் தாழ்வுமனப்பான்மை
தன்னை வெளிப்படுத்துதல் வீரம்
தன்னை மறைத்தல் அச்சம்
தன்னை கண்காணித்தல் சுயகட்டுப்பாடு
தன்னை காட்சிபடுத்துதல் போலிபிம்பம்
தன்னை பழித்தல் குற்றவுணர்வு
தன்னை மன்னித்தல் சுய ஆறுதல்
தன்னை விட்டுகொடுத்தல் தியாகம்
தன்னை கவனித்தல் தியானம்
தன்னை உணர்தல் மெய்ஞானம்
கருத்துகள்
கருத்துரையிடுக